VIVA WORLD SOCCER! Football League 2026 உலக கால்பந்து விளையாட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்கிறது. மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ், யதார்த்தமான விளையாட்டு மற்றும் பரபரப்பான லீக் போட்டிகளுடன், இது முன்னெப்போதும் இல்லாத அனுபவத்தை வழங்குகிறது.
FL26 உங்களை நிகரற்ற ஒரு கால்பந்து உலகிற்கு வரவேற்கிறது. Manchester City மற்றும் AS Monaco போன்ற உலகப் புகழ்பெற்ற அணிகளுடன் முழு உரிமத்துடன் மைதானத்தில் கால் பதித்து, தீவிரமான போட்டியின் சிலிர்ப்பை உணருங்கள். அதிநவீன முழு 3D வீரர் அசைவுகள், ஒரு ஸ்டைலான மற்றும் உள்ளுணர்வு இடைமுகம், மற்றும் கண்ணைக் கவரும் புதிய அரங்கங்கள் என ஒவ்வொரு அம்சமும் உங்களை ஆட்டத்தின் மையத்திற்குள் கொண்டுசெல்லும். நீங்கள் ஆன்லைனில் நண்பர்களுடன் இணைய விரும்பினாலும் அல்லது ஆஃப்லைனில் தனியாக சவால்களை சந்திக்க விரும்பினாலும், FL26 உங்கள் விருப்பத்திற்கேற்ப பல மொழி வர்ணனையுடன் ஒரு இணையற்ற அனுபவத்தை வழங்குகிறது. இது ஒரு வெறும் விளையாட்டு அல்ல, உங்கள் அடுத்த தலைமுறை மொபைல் கால்பந்து அனுபவத்தின் புதிய அத்தியாயம்.
FL26-இல், ஒவ்வொரு நகர்வும் துல்லியம் மற்றும் தீவிரம் நிறைந்ததாக இருக்கும். மேம்பட்ட வீரர் அசைவுகள் மூலம் கால்பந்து வீரார்களின் திறனை முழுமையாக அனுபவித்து, மேலும் புத்திசாலி மற்றும் கணிக்க முடியாத AI-க்கு எதிராக உங்களின் திறமைகளை சோதித்துப்பாருங்கள். உலகம் முழுவதிலுமிருந்து 40,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வீரர்களைக் கொண்ட ஒரு விரிவான பட்டியலில் இருந்து உங்கள் கனவு அணியை உருவாக்குங்கள். சிறப்பு ஒப்பந்தங்கள் மூலம் நட்சத்திர வீரர்களைக் கண்டறிந்து, உங்கள் தந்திரங்களை முழுமையாகத் தனிப்பயனாக்கி, சரியான அணியமைப்பை உருவாக்குங்கள். புதிய ஜெர்சிகள் மற்றும் கால்பந்து பந்துகளுடன் உங்களின் தோற்றத்தை தனிப்பயனாக்குங்கள், மேலும் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் கண்ட்ரோலர் ஆதரவுடன் விளையாட்டை உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். புதிதாக மேம்படுத்தப்பட்ட யூரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை வடிவம் உட்பட பல போட்டிகளில் களமிறங்குங்கள்.
FL26 உங்களுக்கு உலக கால்பந்து அணுபவத்தின் கதவுகளைத் திறக்கிறது. தேசிய கோப்பைகள், சர்வதேச கோப்பைகள், யூரோப்பியன் நேஷன்ஸ் லீக், மற்றும் பிரீமியர் கிளப் லீக்குகள் முதல், பல்வேறு யூரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க சாம்பியன்ஸ் கோப்பைகள் வரை, கணக்கிலடங்கா போட்டிகள் காத்திருக்கின்றன. புதிய அரங்குகளில் நுழையும்போது மேம்படுத்தப்பட்ட அரங்கு சூழ்நிலையின் சக்தியையும் மின்சாரம் போல உற்சாகமான பார்வையாளர் ஆரவாரத்தையும் உணருங்கள், இது ஒவ்வொரு போட்டியையும் உயிர்ப்பிக்கும். உங்கள் கனவு அணியை வழிநடத்தி, ஒவ்வொரு கோப்பையையும் வென்று, FL26 உலகின் மிகப் பெரிய கால்பந்து மேலாளராக உங்கள் பெயரை நிலைநாட்டுங்கள்.